உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 02, 2024 09:50 PM

அ நிறம் | அளவு
ஹூஸ்டன்: ஏ.டி.பி., டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு சந்திரசேகர், பிரசாந்த் ஜோடி முன்னேறியது.
அமெரிக்காவில் ஆண்களுக்கான ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் விஜய் சுந்தர் பிரசாத், அனிருத் சந்திரசேகர் ஜோடி, அமெரிக்காவின் மைக்கேல் மோ, பிரான்செஸ் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 6-3 என எளிதாக வசப்படுத்தியது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, அடுத்த செட்டையும் 6-4 என கைப்பற்றியது. ஒரு மணி நேரம், 20 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 6-3, 6-4 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
