
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்டல்யா: ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் சித்தாந்த், சாய் கார்த்தீக் ஜோடி முன்னேறியது.
துருக்கியில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சித்தாந்த், சாய் கார்த்தீக் ஜோடி, உக்ரைனின் நிகிடா, ஆர்டெம் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 6-2 என எளிதாக கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி 6-4 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
இதில் இன்று செக் குடியரசின் கெல்லோவ்ஸ், ருமேனியாவின் பாவெல் ஜோடியை சந்திக்க உள்ளது.

