ADDED : மார் 14, 2024 10:33 PM

புதுடில்லி: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் ஜோடி முன்னேறியது.
இந்தியாவில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரில் டில்லியில் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், தென் கொரியாவின் யன்சியோக்கை சந்தித்தார். இதில் ராமநாதன் 6-1, 6-2 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்ற இரண்டாவது சுற்று போட்டிகளில் இந்தியாவின் கரண் சிங், மணிஷ் சுரேஷ் குமார், விஸ்வகர்மா உள்ளிட்டோர் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், உஸ்பெகிஸ்தானின் சுல்தானோவ் ஜோடி, 6-0, 7-6 என தாய்லாந்தின் விஷயா, தைவானின் பாங் இன் ஜோடியை சாய்த்து அரையிறுதிக்கு முன்னேறியது. மற்ற காலிறுதி போட்டிகளில் இந்தியாவின் இந்தியாவின் விஷ்ணுவர்தன், சித்தாந்த் ஜோடி, இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார், பரிக்சித் ஜோடி வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தன.
