
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓயிரஸ்: சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் ருடுஜா ஜோடி தோல்வியடைந்தது.
போர்ச்சுகலில் பெண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ருடுஜா போசாலே, நெதர்லாந்தின் லியான் டிரான், ரஷ்யாவின் இப்ராஹிமோவா ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை ருடுஜா ஜோடி 6-1 என வசப்படுத்தியது. பின் இரண்டாவது செட்டை 2-6 என கோட்டை விட்டது. பின் நடந்த 'சூப்பர் டைபிரேக்கரையும்' 7-10 என நழுவவிட்டது.
ஒரு மணி நேரம், 17 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ருடுஜா ஜோடி 6-1, 2-6, 7-10 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.