தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/ பாம்ப்ரி ஜோடி ஏமாற்றம்

பாம்ப்ரி ஜோடி ஏமாற்றம்

பாம்ப்ரி ஜோடி ஏமாற்றம்


UPDATED : மார் 13, 2025 11:20 PM

ADDED : மார் 12, 2025 10:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 13, 2025 11:20 PM ADDED : மார் 12, 2025 10:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியன் வெல்ஸ்: இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் காலிறுதியில் இந்தியாவின் பாம்ப்ரி ஜோடி தோல்வியடைந்தது.

அமெரிக்காவில் இந்தியன் வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சுவீடனின் கோரன்ஸ்சன் ஜோடி, பிரேசிலின் பெர்னாண்டோ ராம்போலி, ஆஸ்திரேலியாவின் பாட்ரிக் ஸ்மித் ஜோடியை எதிர்கொண்டது.

'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை பாம்ப்ரி ஜோடி, 6-7 என இழந்தது. அடுத்த செட்டில் சுதாரித்த பாம்ப்ரி ஜோடி 6-3 என கைப்பற்றியது. வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் டைபிரேக்கர்' நடந்தது. இதை பாம்ப்ரி ஜோடி 8-10 என இழந்தது.

ஒரு மணி நேரம், 50 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி 6-7, 6-3, 8-10 என போராடி தோல்வியடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us