தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/இரண்டாவது சுற்றில் அன்கிதா ரெய்னா

இரண்டாவது சுற்றில் அன்கிதா ரெய்னா

இரண்டாவது சுற்றில் அன்கிதா ரெய்னா


ADDED : டிச 17, 2024 11:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2024 11:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவி மும்பை: ஐ.டி.எப்., டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் அன்கிதா, ராஷ்மிகா வெற்றி பெற்றனர்.

இந்தியாவில் (நவி மும்பை) பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற, இந்தியாவின் அன்கிதா ரெய்னா, கிரீசின் வாலன்டினியை சந்தித்தார். 2 மணி நேரம், 3 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அன்கிதா, 1-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, தாய்லாந்தின் பன்யவாவை 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சஹாஜா, ஜப்பானின் குவாடா ஜோடியை 6-3, 4-6, 10-7 என்ற செட் கணக்கில் சாய்த்து, காலிறுதிக்குள் நுழைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us