/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
மாட்ரிட் ஓபன்: சபலென்கா சாம்பியன்
/
மாட்ரிட் ஓபன்: சபலென்கா சாம்பியன்
ADDED : மே 04, 2025 07:44 PM

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் பெலாரசின் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
ஸ்பெயினில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ காப் மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய சபலென்கா, 'டை பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டை 7-6 என வென்றார்.
ஒரு மணி நேரம், 39 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சபலென்கா 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 3வது முறையாக (2021, 2023, 2025) கோப்பை வென்றார். மாட்ரிட் ஓபன் ஒற்றையரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தை செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவாவுடன் (2011, 2015, 2018) பகிர்ந்து கொண்டார். தவிர இது, டபிள்யு.டி.ஏ., ஒற்றையரில் சபலென்கா கைப்பற்றிய 20வது பட்டம் ஆனது. நடப்பு சீசனில் 3வது கோப்பையை தட்டிச் சென்றார். சமீபத்தில் பிரிஸ்பேன், மயாமி ஓபனில் சாம்பியன் ஆனார்.