/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
மகாராஷ்டிரா ஓபன்: ராம்குமார் ஏமாற்றம்
/
மகாராஷ்டிரா ஓபன்: ராம்குமார் ஏமாற்றம்
UPDATED : பிப் 17, 2025 10:05 PM
ADDED : பிப் 16, 2025 08:39 PM

புனே: மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் தகுதிச் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் தோல்வியடைந்தார்.
புனேயில், மகாராஷ்டிரா ஓபன் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சுவீடனின் எலியாசை வீழ்த்தினார்.
தகுதிச் சுற்று 2வது போட்டியில் ராம்குமார், பெல்ஜியத்தின் கிம்மர் கோப்பிஜான்ஸ் மோதினர். இதில் ராம்குமார் 4-6, 7-6, 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து, பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.
ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கரண் சிங் 4-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் கனடாவின் அலெக்சிஸ்சிடம் தோல்வியடைந்தார்.