/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
மாயா ரேவதி தோல்வி: மும்பை ஓபன் அரையிறுதியில்
/
மாயா ரேவதி தோல்வி: மும்பை ஓபன் அரையிறுதியில்
ADDED : பிப் 08, 2025 10:03 PM

மும்பை: மும்பை ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் இந்தியாவின் மாயா ரேவதி தோல்வியடைந்தார்.
மும்பையில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மாயா ரேவதி, சுவிட்சர்லாந்தின் ஜில் டீச்மேன் மோதினர். முதல் செட்டை 3-6 என இழந்த மாயா, இரண்டாவது செட்டை 1-6 எனக் கோட்டைவிட்டார். முடிவில் மாயா ரேவதி 3-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
இரட்டையர் பிரிவு அரையிறுதியில் ரஷ்யாவின் அமினா அன்ஷ்பா, எலினா பிரிடான்கினா ஜோடி 4-6, 6-3, 10-3 என இத்தாலியின் நிக்கோல் போசா, கேமில்லா ஜோடியை வீழ்த்தியது. இன்று நடக்கும் பைனலில் ரஷ்ய ஜோடி, இந்தியாவின் பிரார்த்தனா தாம்பரே, நெதர்லாந்தின் அரியோன் ஹார்டோனோ ஜோடியை சந்திக்கிறது.