/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
மும்பை ஓபன்: ராஷ்மிகா ஏமாற்றம்
/
மும்பை ஓபன்: ராஷ்மிகா ஏமாற்றம்
ADDED : பிப் 07, 2024 09:35 PM

மும்பை: மும்பை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா தோல்வியடைந்து ஏமாற்றினார்.
மும்பையில் பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., மும்பை ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ரஷ்யாவின் அலினா கோர்னீவா மோதினர்.
முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றிய ராஷ்மிகா, இரண்டாவது செட்டை 4-6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் ஏமாற்றிய இவர் 4-6 எனக் கோட்டைவிட்டார். முடிவில் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா 7-5, 4-6, 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
இரட்டையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் வைஷ்ணவி, சஹாஜா ஜோடி 3-6, 6-7 என சுலோவேனியாவின் தலிலா ஜகுபோவிச், அமெரிக்காவின் சப்ரினா சான்டாமரியா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

