ADDED : பிப் 08, 2024 11:11 PM

மும்பை: மும்பை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ருடுஜா தோல்வியடைந்தார்.
மும்பையில் பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., மும்பை ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ருடுஜா, அமெரிக்காவின் கேட்டி வாலினெட்ஸ் மோதினர். 'டை பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை 6-7 என இழந்த ருடுஜா, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஏமாற்றிய இவர் 1-6 எனக் கோட்டைவிட்டார். முடிவில் ருடுஜா 6-7, 6-2, 1-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரார்த்தனா தாம்ப்ரே, நெதர்லாந்தின் அரியன் ஹார்டோனோ ஜோடி 6-4, 6-2 என கிரீசின் சாப்போ, ஆஸ்திரேலியாவின் ஒலிவியா ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

