ADDED : பிப் 15, 2025 10:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லி ஓபன் டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் நிக்கி கலியாண்டா பூனாச்சா, ஜிம்பாப்வேயின் கர்ட்னி ஜான் லாக் ஜோடி 2வது இடம் பிடித்தது.
டில்லியில், ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் நிக்கி கலியாண்டா பூனாச்சா, ஜிம்பாப்வேயின் கர்ட்னி ஜான் லாக் ஜோடி, ஜப்பானின் மசமிச்சி இமாமுரா, ரியோ நோகுச்சி ஜோடியை எதிர்கொண்டது.
இதில் நிக்கி பூனாச்சா, ஜான் லாக் ஜோடி 4-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து, 2வது இடம் பெற்றது. ஜப்பான் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

