தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/காலிறுதியில் ராமநாதன்

காலிறுதியில் ராமநாதன்

காலிறுதியில் ராமநாதன்


ADDED : மார் 21, 2024 10:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2024 10:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சண்டிகர்: ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் முன்னேறினார்.

சண்டிகரில் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், தென் கொரியாவின் ஷின் வூபின் மோதினர். முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய ராமநாதன், இரண்டாவது செட்டை 7-5 என வென்றார். முடிவில் ராம்குமார் ராமநாதன் 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு 2வது சுற்றில் இந்தியாவின் சிராக் துஹன் 6-4, 6-4 என மலேசியாவின் மிட்சுகி வெய் காங் லியாங்கை வென்றார். காலிறுதியில் ராமநாதன், சிராக் மோதுகின்றனர்.

இந்தியாவின் சசிகுமார் முகுந்த் 6-2, 4-6, 6-0 என சகவீரர் மத்வின் கமத்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் சித்தார்த் விஷ்வகர்மா 7-6, 6-4 என சகவீரர் யுவன் நந்தாலை வீழ்த்தினார். மற்ற 2வது சுற்றுப் போட்டிகளில் சித்தார்த் ரவாத், நிதின் குமார் சின்ஹா தோல்வியடைந்தனர்.

இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார், விஷ்ணுவர்தன் ஜோடி 6-3, 6-2 என இந்தியாவின் சிராக் துஹன், ஜப்பானின் யுசிரோ இனுய் ஜோடியை வீழ்த்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us