ADDED : மார் 13, 2024 10:50 PM

புதுடில்லி: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு ராமநாதன் ஜோடி முன்னேறியது.
இந்தியாவில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரில் டில்லியில் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், உஸ்பெகிஸ்தானின் சுல்தானோவ் ஜோடி, இந்தியாவின் கரண் சிங், பிரான்சின் புளோரன்ட் ஜோடியை சந்தித்தது. இதில் ராம்குமார் ஜோடி 7-6, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
மற்ற போட்டிகளில் இந்தியாவின் விஷ்ணுவர்தன், சித்தாந்த் ஜோடி, இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார், பரிக்சித் ஜோடி வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறின.
ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ராம்குமார் ராமநாதன், தாய்லாந்தின் தனாபேட் சன்டாவை எதிர்கொண்டார். இதில் ராமநாதன் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் இந்திய வீரர்கள் விஸ்வகர்மா, துஹான், கபிர் ஹன்ஸ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
