ADDED : மார் 23, 2024 09:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டிகர்: ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பைனலுக்கு இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் முன்னேறினார்.
சண்டிகரில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், வியட்நாமின் நாம் ஹோங் லி மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய ராமநாதன், இரண்டாவது செட்டை 6-2 என தன்வசப்படுத்தினார். முடிவில் ராம்குமார் ராமநாதன் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், உஸ்பெகிஸ்தானின் குமோயுன் சுல்தானோவ் மோதினர். இதில் ஏமாற்றிய சசிகுமார் முகுந்த் 2-6, 1-6 என தோல்வியடைந்து வெளியேறினார்.
பைனலில் ராமநாதன், சுல்தானோவ் மோதுகின்றனர்.

