/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
சாதிப்பாரா ராஷ்மிகா: சென்னை ஓபன் டென்னிசில்
/
சாதிப்பாரா ராஷ்மிகா: சென்னை ஓபன் டென்னிசில்
ADDED : அக் 26, 2025 11:08 PM

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் இந்தியாவின் ராஷ்மிகா, மாயா ரேவதி, சஹாஜா, சாதிக்க காத்திருக்கின்றனர்.
சென்னையில், பெண்களுக்கான 'டபிள்யு.டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் இன்று துவங்குகிறது. ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் மாயா ரேவதி, சஹாஜா, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா என மூவருக்கு சிறப்பு அனுமதி ('வைல்டு கார்டு') வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் சொந்த மண்ணில் அசத்தினால், கோப்பை வென்று சாதிக்கலாம். இரட்டையரில் இந்தியாவின் வைஷ்ணவி-மாயா ரேவதி, லட்சுமி-தியா ஜோடிக்கு 'வைல்டு கார்டு' சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
'நடப்பு சாம்பியன்' செக் குடியரசின் லிண்டா புருக்விர்ட்டோவா, ஜெர்மனியின் டாட்ஜனா மரியா, போலந்தின் மாக்டா லினெட்டே, குரோஷியாவின் டோன்னா வெகிச் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
வைஷ்ணவி ஏமாற்றம்: ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்று 2வது போட்டியில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர், பிரான்சின் அஸ்ட்ரிட் லுா யான் பூன் மோதினர். இதில் ஏமாற்றிய வைஷ்ணவி 2-6, 3-6 என தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் ஜப்பானின் மெய் யமாகுச்சி 2-6, 6-4, 6-2 என ஆஸ்திரேலியாவின் அரினா ரோடியனோவாவை வீழ்த்தினார். நெதர்லாந்தின் அரியேன் ஹர்டோனோ 6-2, 6-1 என இந்தோனேஷியாவின் பிரிஸ்காவை தோற்கடித்தார்.

