/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
ரித்விக்-நிக்கி ஜோடி சாம்பியன்
/
ரித்விக்-நிக்கி ஜோடி சாம்பியன்
ADDED : ஏப் 01, 2024 09:57 PM

சான் லுாயிஸ்: சான் லுாயிஸ் ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரித்விக் சவுத்தரி, நிக்கி பூனாச்சா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
மெக்சிகோவில் ஆண்களுக்கான சான் லுாயிஸ் ஓபன் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ரித்விக் சவுத்தரி, நிக்கி பூனாச்சா ஜோடி, சுவிட்சர்லாந்தின் அன்டோயின் பெல்லியர், மார்க்-ஆன்ரியா ஹூஸ்லர் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 6-2 என தன்வசப்படுத்தியது. மொத்தம் 55 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ரித்விக் சவுத்தரி, நிக்கி பூனாச்சா ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இது, இந்த ஜோடியின் முதல் ஏ.டி.பி., சேலஞ்சர் இரட்டையர் பட்டம்.

