ADDED : ஏப் 21, 2024 11:33 PM

அகபல்கோ: ஏ.டி.பி., சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் ரித்விக், -பூனாச்சா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
மெக்சிகோவில் ஆண்களுக்கான ஏ.டி.பி., சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ரித்விக் சவுத்தரி, நிக்கி கலியாண்டா பூனாச்சா ஜோடி, பிரிட்டனின் லுாக் ஜான்சன், துனிசியாவின் ஸ்கந்தர் மன்சூரி ஜோடியை எதிர்கொண்டது. 'டை பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 7-5 என தன்வசப்படுத்தியது.
ஒரு மணி நேரம், 38 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ரித்விக், பூனாச்சா ஜோடி 7-6, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இது, இந்த ஆண்டு இந்த ஜோடி கைப்பற்றிய 2வது சாம்பியன் பட்டம். சமீபத்தில் மெக்சிகோவில் நடந்த சான் லுாயிஸ் சாலஞ்சர் தொடரில் கோப்பை வென்றிருந்தது.
