ADDED : அக் 17, 2026 02:18 AM

அரையிறுதியில் ஸ்வியாடெக்
உஹான்: சீனாவில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., உஹான் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஆன் லி மோதினர். இதில் ஸ்வியாடெக் 6–4, 6–1 என வெற்றி பெற்றார். மற்றாரு காலிறுதியில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 2–6, 6–2, 4–6 என பிரிட்டனின் சோனே கார்டலிடம் வீழ்ந்தார். லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 7–6, 6–1 என, ரஷ்யாவின் டயானா ஷ்னைடரை வென்றார். கிரீசின் மரியா சக்காரி 0–6, 6–3, 5–7 என, போலந்தின் மஜா ஸ்வாலின்ஸ்காவிடம் தோல்வியடைந்தார்.
மெத்வெடேவ் முன்னேற்றம்
ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில், ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ரஷ்யாவின் டேனில் மெத்வெடேவ், அமெரிக்காவின் டாமி பால் மோதினர். இதில் மெத்வெடேவ் 6–3, 1–6, 6–3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் நார்வேயின் காஸ்பர் ரூட் 6–4, 4–6, 3–6 என, ஸ்பெயினின் ரபேல் ஜோடாரிடம் தோல்வியடைந்தார்.
பென்பிகா அணி அபாரம்
லிஸ்பன்: போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் நடந்த ஐரோப்பா லீக் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் பென்பிகா (போர்ச்சுகல்), செல்டிக் (ஸ்காட்லாந்து) அணிகள் மோதின. இதில் பென்பிகா அணி 4–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு லீக் போட்டியில் ஸ்பெயினின் செல்டா விகோ அணி 1–2 என, இத்தாலியின் யுவென்டஸ் அணியிடம் தோல்வியடைந்தது. இத்தாலியின் மிலன் அணி 4–0 என, ஆஸ்திரியாவின் ரெட் புல் சால்ஸ்பர்க் அணியை வென்றது.
