தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/‘ரவுண்ட்–அப்’

‘ரவுண்ட்–அப்’

‘ரவுண்ட்–அப்’


UPDATED : அக் 16, 2026 12:00 AM

ADDED : அக் 15, 2026 06:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 12:00 AM ADDED : அக் 15, 2026 06:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலிறுதியில் ஸ்விடோலினா

உஹான்: சீனாவில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., உஹான் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு ‘ரவுண்டு–16’ போட்டியில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6–1, 6–4 என, சீனாவின் ஹன்யூ குவோவை வீழ்த்தினார். லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 6–1, 1–6, 6–4 என, கனடாவின் லெய்லா பெர்னாண்டசை வென்றார். ரஷ்யாவின் டயானா ஷ்னைடர் 7–5, 6–3 என, செக்குடியரசின் கரோலினா முசோவாவை தோற்கடித்தார்.

அரையிறுதியில் ஸ்வெரேவ்

ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் மோதினர். இதில் ஸ்வெரேவ் 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

‘பிளே–ஆப்’ சுற்றில் மயாமி

மயாமி கார்டன்ஸ்: கனடா, அமெரிக்காவில், மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.,) 31வது சீசன் நடக்கிறது. மயாமி கார்டனில் நடந்த லீக் போட்டியில், ‘நடப்பு சாம்பியன்’ இன்டர் மயாமி, நியூயார்க் சிட்டி அணிகள் மோதின. இதில் மயாமி அணி 2–0 என வெற்றி பெற்றது. மயாமி அணியின் நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, லுாயிஸ் சாரஸ், சகவீரர்கள் கோல் அடிக்க ‘அசிஸ்ட்’ செய்தனர். இதுவரை விளையாடிய 29 போட்டியில், 14 வெற்றி, 10 ‘டிரா’, 5 தோல்வி என, 52 புள்ளிகளுடன் இன்டர் மயாமி அணி ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us