தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/‘ரவுண்ட்–அப்’

‘ரவுண்ட்–அப்’

‘ரவுண்ட்–அப்’


ADDED : நவ 06, 2026 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2026 12:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜோகோவிச் கனவு தகர்ந்தது

பாரிஸ்: பிரான்சில், பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகட்டா மோதினர். இதில் ஜோகோவிச் 6–2, 3–6, 3–6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதன்மூலம் இத்தாலியின் டுரின் நகரில் நடக்கவுள்ள ஏ.டி.பி., பைனல்ஸ் (நவ. 15–22) தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார் ஜோகோவிச். கடந்த 20 ஆண்டுகளில் 2வது முறையாக (2017, 2026) ஏ.டி.பி., பைனல்ஸ் தொடருக்கு தகுதி பெறத்தறவினார் ஜோகோவிச்.

ரியல் மாட்ரிட் அபாரம்

ஏதென்ஸ்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து 72வது சீசன் நடக்கிறது. கிரீசின் ஏதென்ஸ் நகரில் நடந்த லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), ஏதென்ஸ் (கிரீஸ்) அணிகள் மோதின. இதில் ரியல் மாட்ரிட் அணி 3–2 என்ற கோல் கணக்கில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 4 போட்டியிலும் வெற்றி பெற்ற ரியல் மாட்ரிட் அணி (12 புள்ளி) 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பிரான்சின் பாரிஸ் செயின்ட்–ஜெர்மைன் அணி (12) உள்ளது.

‘பார்முலா–1’ வீரர் மரணம்

சிட்னி: ஆஸ்திரேலிய ‘பார்முலா–1’ கார்பந்தய வீரர் ஆலன் ஜோன்ஸ் 80. கடந்த 1980ல் வில்லியம்ஸ் அணிக்காக விளையாடிய இவர், உலக சாம்பியன் பட்டம் கைப்பற்றிய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனை படைத்திருந்தார். ‘பார்முலா–1’ போட்டிகளில் 12 முறை சாம்பியன் பட்டம் வென்ற இவர், உடல்நலக் குறைவால் காலமானார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us