
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புகுவோகா: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரில் பைனலுக்கு ருடுஜா-பெய்ஜ் ஜோடி கோப்பை வென்றது.
ஜப்பானில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ருடுஜா போசாலே, நியூசிலாந்தின் பெய்ஜ் மேரி ஜோடி, ஜப்பானின் ஹருனா அரகவா, ஆவோய் இடோ ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை ருடுஜா ஜோடி 3-6 என கோட்டை விட்டது. பின் சுதாரித்துக் கொண்ட இந்த ஜோடி அடுத்த செட்டை 6-3 என வசப்படுத்தியது. வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் டைபிரேக்கர்' நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட ருடுஜா ஜோடி 10-6 என கைப்பற்றியது. ஒரு மணி நேரம், 30 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ருடுஜா ஜோடி, 3-6, 6-3, 10-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, கோப்பை கைப்பற்றியது.