ADDED : மே 02, 2024 10:41 PM

ஜிபு: ஐ.டி.எப்., டென்னிஸ் காலிறுதிக்கு பிரார்த்தனா, ருடுஜா ஜோடி காலிறுதிக்கு முன்னேறின.
ஜப்பானில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரார்த்தனா தாம்ப்ரே, நெதர்லாந்தின் ஹர்டோனா ஜோடி, சீனாவின் மா எசின், தாய்லாந்தின் மனன்சாயா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை பிரார்த்தனா ஜோடி 'டை பிரேக்கர்' வரை சென்று 6-7 என இழந்தது.
அடுத்த செட்டை 6-4 என வசப்படுத்தியது. பின் நடந்த 'சூப்பர் டைபிரேக்கரில்' 13-11 என கைப்பற்றியது. 1 மணி நேரம், 58 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பிரார்த்தனா ஜோடி 6-7, 6-4, 13-11 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் ருடுஜா போசாலே, பிரிட்டனின் சாரா பேத் ஜோடி, ஜப்பானின் நட்சுமி, தென் கொரியாவின் சோயுன் பார்க் ஜோடியை சந்தித்தது. இதில் ருடுஜா ஜோடி 5-7, 6-0, 10-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

