/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
ரிபாகினா புதிய சாம்பியன்: டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிசில்
/
ரிபாகினா புதிய சாம்பியன்: டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிசில்
ரிபாகினா புதிய சாம்பியன்: டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிசில்
ரிபாகினா புதிய சாம்பியன்: டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிசில்
ADDED : நவ 09, 2025 09:29 PM

ரியாத்: டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் ஒற்றையரில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா கோப்பை வென்றார்.
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில், உலகின் 'டாப்-8' வீராங்கனைகள் பங்கேற்ற டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, 6வது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய ரிபாகினா, 'டை பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டை 7-6 என தன்வசப்படுத்தினார்.
ஒரு மணி நேரம், 47 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ரிபாகினா 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். தவிர இது, இவரது 11வது ஒற்றையர் பட்டம். இத்தொடரில் கோப்பை வென்ற முதல் கஜகஸ்தான் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் ரிபாகினா. ரிபாகினாவுக்கு, கோப்பையுடன் ரூ. 46 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. சபலென்காவுக்கு ரூ. 23 கோடி பரிசாக கிடைத்தது.