/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
அல்காரஸ் 'நம்பர்-1': ஏ.டி.பி., டென்னிஸ் தரவரிசையில்
/
அல்காரஸ் 'நம்பர்-1': ஏ.டி.பி., டென்னிஸ் தரவரிசையில்
அல்காரஸ் 'நம்பர்-1': ஏ.டி.பி., டென்னிஸ் தரவரிசையில்
அல்காரஸ் 'நம்பர்-1': ஏ.டி.பி., டென்னிஸ் தரவரிசையில்
ADDED : நவ 10, 2025 10:43 PM

புதுடில்லி: ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ஸ்பெயினின் அல்காரஸ் முதலிடத்துக்கு முன்னேறினார்.
டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது. ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் (11050 புள்ளி) 2வது இடத்தில் இருந்து 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றினார். இவர், ஏ.டி.பி., பைனல்ஸ் தொடரின் 3 லீக் போட்டியிலும் வெற்றி பெற்றால், ஆண்டு இறுதியில் வெளியாகும் ஏ.டி.பி., தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.
இத்தாலியின் ஜானிக் சின்னர் (10000) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஜெர்மனியின் ஸ்வெரேவ் (4960) 3வது இடத்தில் நீடிக்கிறார்.
கிரீசில் நடந்த ஹெலனிக் சாம்பியன்ஷிப் ஒற்றையரில் கோப்பை வென்ற செர்பியாவின் ஜோகோவிச் (4830) 4வது இடத்துக்கு முன்னேறினார். அமெரிக்காவின் பென் ஷெல்டன் (3970) 5வது இடத்தை கைப்பற்றினார்.
ரிபாகினா முன்னேற்றம்: ரியாத்தில் நடந்த டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் ஒற்றையரில் கோப்பை வென்ற கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா (5850) 5வது இடத்துக்கு முன்னேறினார். முதல் நான்கு இடங்களை சபலென்கா (கஜகஸ்தான்), ஸ்வியாடெக் (போலந்து), கோகோ காப் (அமெரிக்கா), அனிசிமோவா (அமெரிக்கா) தக்கவைத்துக் கொண்டனர்.

