தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/மூன்றாவது சுற்றில் சபலென்கா: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்

மூன்றாவது சுற்றில் சபலென்கா: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்

மூன்றாவது சுற்றில் சபலென்கா: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்


ADDED : செப் 03, 2026 10:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 10:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் 3வது சுற்றுக்கு பெலாரசின் சபலென்கா, ஸ்பெயினின் அல்காரஸ் உள்ளிட்டோர் முன்னேறினர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், 'நடப்பு சாம்பியன்' பெலாரசின் அரினா சபலென்கா, ரஷ்யாவின் போலினா இயாட்சென்கோ மோதினர். மொத்தம் 53 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சபலென்கா 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு 2வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 6-1 என, சகவீராங்கனை சோபியா கெனினை தோற்கடித்தார். இத்தாலியின் ஜாஸ்மின் 6-4, 6-1 என, சகவீராங்கனை லுக்ரேசியாவை வென்றார். உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-2, 6-7, 6-4 என ஆஸ்திரேலியாவின் மாயாவை வீழ்த்தினார். உக்ரைனின் மார்டா கோஸ்டியுக் 6-1, 7-5 என அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை வென்றார்.

மற்ற 2வது சுற்று போட்டிகளில் செக்குடியரசின் கரோலினா முசோவா, லிண்டா நோஸ்கோவா, அமெரிக்காவின் எம்மா நவரோ, டெய்லர் டவுன்சென்ட், ஸ்பெயினின் பவுலா படோசா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

அல்காரஸ் அசத்தல்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், போர்ச்சுகலின் ஜெய்மி பாரியா மோதினர். முதல் செட்டை 4-6 என இழந்த அல்காரஸ், பின் எழுச்சி கண்டு அடுத்த 3 செட்களை 6-0, 6-3, 6-2 என வென்றார். முடிவில் அல்காரஸ் 4-6, 6-0, 6-3, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு 2வது சுற்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 5-7, 7-6, 7-5 என போலந்தின் ஹுபெர்ட் ஹுர்காச்சை வீழ்த்தினார்.

மற்ற 2வது சுற்று போட்டிகளில் ரஷ்யாவின் டேனியல் மெத்வெடேவ், அமெரிக்காவின் டாமி பால், கிரீசின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

'வில்-அம்பு' கொண்டாட்டம்

ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், 2வது சுற்று போட்டி முடிந்த பின், 'கேலரியில்' அமர்ந்திருந்த தனது தம்பிகளை நோக்கி, 'வில் - அம்பு' எய்வது போல வெற்றியை கொண்டாடினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us