/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
சபலென்கா மீண்டும் சாம்பியன்: யு.எஸ்., ஓபன் டென்னிசில் கலக்கல்
/
சபலென்கா மீண்டும் சாம்பியன்: யு.எஸ்., ஓபன் டென்னிசில் கலக்கல்
சபலென்கா மீண்டும் சாம்பியன்: யு.எஸ்., ஓபன் டென்னிசில் கலக்கல்
சபலென்கா மீண்டும் சாம்பியன்: யு.எஸ்., ஓபன் டென்னிசில் கலக்கல்
ADDED : செப் 07, 2025 04:47 PM

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் பெலாரசின் சபலென்கா மீண்டும் கோப்பை வென்றார். பைனலில், அமெரிக்காவின் அனிசிமோவாவை வீழ்த்தினார்.
நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா ('நம்பர்-9') மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய சபலென்கா, 'டை பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டை 7-6 என வென்றார்.
ஒரு மணி நேரம், 34 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சபலென்கா 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபனில் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். தவிர இவர், அமெரிக்காவின் செரினாவுக்கு பின் (2012-14) யு.எஸ்., ஓபனில் அடுத்தடுத்த ஆண்டுகளில் கோப்பை வென்ற வீராங்கனையானார்.
இது, சபலென்கா கைப்பற்றிய 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். ஏற்கனவே ஆஸ்திரேலிய ஓபனில் இரண்டு முறை (2023-24) சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். மற்ற கிராண்ட்ஸ்லாம் தொடர்களான பிரெஞ்ச் ஓபன் (2025ல் பைனல்), விம்பிள்டனில் (2021, 2023, 2025ல் அரையிறுதி) சபலென்கா கோப்பை வென்றதில்லை. சபலென்காவுக்கு கோப்பையுடன், ரூ. 44 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.