தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/சபலென்கா-பெகுலா பலப்பரீட்சை: யு.எஸ்., ஓபன் பைனலில்

சபலென்கா-பெகுலா பலப்பரீட்சை: யு.எஸ்., ஓபன் பைனலில்

சபலென்கா-பெகுலா பலப்பரீட்சை: யு.எஸ்., ஓபன் பைனலில்


ADDED : செப் 06, 2024 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2024 11:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் பைனலில் சபலென்கா, பெகுலா மோதுகின்றனர்.

நியூயார்க்கில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் எம்மா நவரோ மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய சபலென்கா, 'டை பிரேக்கர்' வரை சென்ற இரண்டாவது செட்டை 7-6 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 30 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் சபலென்கா 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறையாக (2023, 2024) பைனலுக்குள் நுழைந்தார்.

பெகுலா அபாரம்: மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, செக்குடியரசின் கரோலினா முச்சோவா மோதினர். இரண்டு மணி நேரம், 12 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய பெகுலா 1-6, 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று கிராண்ட்ஸ்லாம் அரங்கில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறினார்.

பைனலில் சபலென்கா, பெகுலா மோதுகின்றனர். இருவரும் ஏற்கனவே 7 முறை மோதியுள்ளனர். இதில் சபலென்கா 5, பெகுலா 2ல் வெற்றி பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us