/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
கோப்பை வென்றார் சின்னர்: ஆஸ்திரேலிய ஓபனில் அசத்தல்
/
கோப்பை வென்றார் சின்னர்: ஆஸ்திரேலிய ஓபனில் அசத்தல்
கோப்பை வென்றார் சின்னர்: ஆஸ்திரேலிய ஓபனில் அசத்தல்
கோப்பை வென்றார் சின்னர்: ஆஸ்திரேலிய ஓபனில் அசத்தல்
ADDED : ஜன 26, 2025 09:45 PM

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் இத்தாலியின் சின்னர் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர், 2வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய சின்னர், 'டை பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டை 7-6 என போராடி தன்வசப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய இவர், 3வது செட்டை 6-3 என வென்றார்.
இரண்டு மணி நேரம், 42 நிமிடம் நீடித்த போட்டியில் சின்னர் 6-3, 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டார்.
ஆஸ்திரேலிய ஓபனில் தொடர்ச்சியாக 2வது முறை (2024, 2025) கோப்பை வென்ற சின்னர், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தனது 3வது பட்டத்தை கைப்பற்றினார். இவர், கடந்த ஆண்டு யு.எஸ்., ஓபனிலும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அமெரிக்காவின் ஜிம் கூரியருக்கு (1992, 1993) பின், ஆஸ்திரேலிய ஓபனில் தொடர்ச்சியாக 2 முறை கோப்பை வென்ற இளம் வீரரானார் (23 வயது) சின்னர்.

