/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
சின்னர், சபலென்கா 'நம்பர்-1': டென்னிஸ் தரவரிசையில்
/
சின்னர், சபலென்கா 'நம்பர்-1': டென்னிஸ் தரவரிசையில்
சின்னர், சபலென்கா 'நம்பர்-1': டென்னிஸ் தரவரிசையில்
சின்னர், சபலென்கா 'நம்பர்-1': டென்னிஸ் தரவரிசையில்
ADDED : ஜூன் 09, 2025 10:54 PM

பாரிஸ்: டென்னிஸ் தரவரிசையில் இத்தாலியின் சின்னர், பெலாரசின் சபலென்கா 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கின்றனர்.
டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது. ஒற்றையர் பிரிவு தரவரிசையில், பிரெஞ்ச் ஓபனில் பைனல் வரை சென்ற இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். பிரெஞ்ச் ஓபனில் தொடர்ந்து 2வது முறையாக கோப்பை வென்ற ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 2வது இடத்தில் நீடிக்கிறார்.
அரையிறுதியில் தோல்வியடைந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் லோரென்சோ முசெட்டி முறையே 5, 6வது இடத்துக்கு முன்னேறினர். காலிறுதி வரை சென்ற அமெரிக்காவின் டாமி பால், 12வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் பிரெஞ்ச் ஓபன் பைனலில் தோல்வி கண்ட பெலாரசின் அரினா சபலென்கா, 'நம்பர்-1' இடத்தில் தொடர்கிறார். முதன்முறையாக கோப்பை வென்ற அமெரிக்காவின் கோகோ காப், 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
அரையிறுதியில் வீழ்ந்த போலந்தின் இகா ஸ்வியாடெக், 7வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அரையிறுதி வரை சென்ற பிரான்சின் லோயிஸ் போய்சன், 296 இடம் முன்னேறி 65வது இடத்தை கைப்பற்றினார்.