ADDED : ஜூன் 15, 2024 12:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருகியா: ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் அரையிறுதிக்கு இந்தியாவின் சுமித் நாகல் முன்னேறினார்.
இத்தாலியில், ஆண்களுக்கான ஏ.டி.பி., பெருகியா சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் சுமித் நாகல், போலந்தின் மாக்ஸ் காஸ்னிகோவ்ஸ்கி மோதினர். முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய சுமித் நாகல், இரண்டாவது செட்டை 7-5 என தன்வசப்படுத்தினார். முடிவில் சுமித் நாகல் 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜெர்மனியின் ஆன்ட்ரி பெக்மேன் ஜோடி 6-3, 3-6, 10-6 என இத்தாலியின் பெடெரிகோ சினா, பிரான்செஸ்கோ மேஸ்ட்ரெல்லி ஜோடியை வீழ்த்தியது.