ADDED : ஏப் 11, 2024 10:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மான்டி கார்லோ: மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் 2வது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வியடைந்தார்.
பிரான்சில் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் உலகின் 'நம்பர்-93' இந்தியாவின் சுமித் நாகல், 7வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் மோதினர். இதில் சுமித் நாகல் 3-6, 6-3, 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். இத்தொடரில் இந்திய வீரர்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி தோல்வியை தழுவியது.

