ADDED : ஏப் 01, 2024 09:58 PM

புதுடில்லி: ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் இந்தியாவின் சுமித் நாகல் முதன்முறையாக 95வது இடத்துக்கு முன்னேறினார்.
டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல், 97வது இடத்தில் இருந்து முதன்முறையாக 95வது இடத்தை கைப்பற்றினார். சமீபத்தில் முடிந்த மயாமி ஓபன் ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் தொடரில் அறிமுகமான சுமித் நாகல், தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் தோல்வியடைந்தார்.
மற்றொரு இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், 61 இடங்கள் முன்னேறி 349வது இடத்தை தட்டிச் சென்றார். சசிகுமார் முகுந்த், 446வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
மயாமி ஓபன் ஒற்றையரில் கோப்பை வென்ற இத்தாலியின் ஜானிக் சின்னர், 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார். ஸ்பெயின் கார்லஸ் அல்காரஸ் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார்.

