sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

ஸ்வியாடெக் 'வெண்கலம்'

/

ஸ்வியாடெக் 'வெண்கலம்'

ஸ்வியாடெக் 'வெண்கலம்'

ஸ்வியாடெக் 'வெண்கலம்'


ADDED : ஆக 02, 2024 11:55 PM

Google News

ADDED : ஆக 02, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ் ஒலிம்பிக் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-4வது இடத்துக்கான போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், சுலோவாகியாவின் அனா கரோலினா மோதினர். அபாரமாக ஆடிய ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார். இது, ஒலிம்பிக் வரலாற்றில் இவரது முதல் பதக்கம்.

* ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலிசியாம் மோதினர். இதில் அல்காரஸ் 6-1, 6-1 என வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.

ஆன்டி முர்ரே ஓய்வு

டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, டேனியல் ஈவன்ஸ் ஜோடி 2-6, 4-6 என அமெரிக்காவின் டெய்லர் ஹாரி பிரிட்ஸ், டாமி பால் ஜோடியிடம் தோல்வியடைந்தது. இதனையடுத்து சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த ஆன்டி முர்ரே, கண்ணீருடன் விடை பெற்றார். கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் 3 பட்டம் (2012ல் யு.எஸ்., ஓபன், 2013, 2016ல் விம்பிள்டன்) வென்றுள்ள முர்ரே, ஒலிம்பிக் ஒற்றையரில் 2 தங்கம் (2012, 2016), இரட்டையரில் ஒரு வெள்ளி (2012) பதக்கம் கைப்பற்றினார்.






      Dinamalar
      Follow us