UPDATED : ஆக 04, 2025 11:16 PM
ADDED : ஆக 04, 2025 04:29 PM

மான்ட்ரியல்: கனடா ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் போலந்தின் ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
கனடாவின் மான்ட்ரியலில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., நேஷனல் பாங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், டென்மார்க்கின் கிளாரா டாசன் மோதினர். இதில் ஏமாற்றிய ஸ்வியாடெக் 6-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்றொரு போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-1, 6-0 என லாட்வியாவின் அனஸ்டாசிஜா செவாஸ்டோவாவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். அமெரிக்காவின் மடிசன் கீஸ் 4-6, 6-3, 7-5 என செக்குடியரசின் கரோலினா முச்சோவாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு 'ரவுண்டு-16' போட்டியில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-4, 6-1 என அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை வீழ்த்தினார்.