/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
டென்னிஸ்: இந்தியா-பாக்., மோதல் * 60 ஆண்டுக்குப் பின்...
/
டென்னிஸ்: இந்தியா-பாக்., மோதல் * 60 ஆண்டுக்குப் பின்...
டென்னிஸ்: இந்தியா-பாக்., மோதல் * 60 ஆண்டுக்குப் பின்...
டென்னிஸ்: இந்தியா-பாக்., மோதல் * 60 ஆண்டுக்குப் பின்...
ADDED : பிப் 01, 2024 10:58 PM

இஸ்லாமாபாத்: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நாளை இஸ்லாமாபாத்தில் துவங்குகிறது.
சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் அணிகளுக்கான டேவிஸ் கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. உலக 'குரூப் 1' 'பிளே ஆப்' சுற்றில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, நாளை பாகிஸ்தானை சந்திக்கிறது. இதில் வென்றால் அடுத்து, உலக குரூப் 1ல் பங்கேற்க தகுதி பெறலாம்.
60 ஆண்டு
இந்திய அணி கடைசியாக 1964ல் பாகிஸ்தான் மண்ணில் டென்னிஸ் விளையாடியது. இதில், இந்தியா 4-0 என வென்றது. பின் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு செல்லவில்லை. 2019ல் பாகிஸ்தானில் நடக்க இருந்த டேவிஸ் கோப்பை தொடர், இந்தியா வற்புறுத்தலால் கஜகஸ்தானுக்கு மாற்றப்பட்டது. இம்முறையும் இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், தொடரை நடத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக இருந்தது. வேறு வழியில்லாத நிலையில், 60 ஆண்டுக்குப் பின் இந்திய அணி, பாகிஸ்தான் சென்றுள்ளது.
இதில் ராம்குமார் ராமநாதன், யூகி பாம்ப்ரி, ஸ்ரீராம் பாலாஜி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இத்தொடரால், பாகிஸ்தானில் டென்னிஸ் புத்துயிர் பெறலாம். இங்கு இந்தியா, பாகிஸ்தான் மோதலுக்கான எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. ஒரு விளம்பர போஸ்டர் கூட காணப்படவில்லை.
இதுகுறித்து பாகிஸ்தான் டென்னிஸ் கூட்டமைப்பு பொருளாளர் முகமது கலில் கூறுகையில்,'' இந்திய வீரர்களின் போஸ்டர்களை நகரம் முழுவதும் வைத்திருப்போம். ஆனால், எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன,'' என்றார். போட்டியை காண முக்கிய நபர்களுக்கு மட்டும் அழைப்பு தரப்பட்டுள்ளதால், அதிகபட்சம் 500 பேர் வரை மட்டுமே மைதானத்துக்கு வரலாம்.
பலத்த பாதுகாப்பு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் மர்காலா மலைப்பகுதியில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் மோதல் நடக்கிறது. பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஓட்டல், மைதானம் தவிர வேறு எங்கும் செல்ல வீரர்களுக்கு அனுமதி இல்லை.