உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 14, 2024 10:32 PM

அ நிறம் | அளவு
தைபே: சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் முதல் சுற்றில் ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்றார்.
தைவானில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது.
ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், தைவான் வீரர் பாங் ஷூவோ இங் ஜோடியை சந்தித்தார். ஒருமணி நேரம் 25 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ராமநாதன் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் சசிக்குமார் முகுந்த் ('நம்பர்-471'), முன்னணி வீரர், ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த்துடன் (102 வது இடம்) மோதினார். இதில் சசிக்குமார், 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
