ADDED : மே 23, 2024 10:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்ரெட்டி: பிரான்சில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், துருக்கியின் யான்கி எரெல் ஜோடி, தாய்லாந்தின் எசாரோ, கனடாவின் ஸ்டீவன்சன் ஜோடியை சந்தித்தது.
முதல் இரு செட்டை ராமநாதன் ஜோடி கைப்பற்றியது. பின் நடந்த சூப்பர் டை பிரேக்கரை 10-7 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 56 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில் ராமநாதன் ஜோடி 6-3, 6-7, 10-7 என வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.
ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் ராமநாதன், ஆஸ்திரேலியாவின் பிலிப் செகுலிச் மோதினர். மூன்று மணி நேரம் நீடித்த போட்டியின் முடிவில் ராமநாதன் 6-7, 6-4, 6-7 என போராடி தோல்வியடைந்தார்.

