உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 23, 2024 10:11 PM

அ நிறம் | அளவு
ஷென்ஜென்: சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடரின் தகுதிச்சுற்றில் ராம்குமார் ராமநாதன் தோல்வியடைந்தார்.
சீனாவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் தகுதிச்சுற்று முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், இரண்டாவது போட்டியில் நேற்று ஜப்பானின் ரியோ நோகுச்சியை சந்தித்தார். முதல் செட்டை ராமநாதன் 2-6 என இழந்தார்.
இரண்டாவது செட்டில் ராமநாதன் போராடிய போதும், 'டை பிரேக்கர்' வரை சென்று 6-7 என நழுவவிட்டார். முடிவில் ராமநாதன் 2-6, 6-7 என தோல்வியடைந்தார்.
ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் ராமநாதன், தைவானின் ரே ஹோ ஜோடி, சுவிட்சர்லாந்தின் ரெமி பேர்ட்டோலா, பிரான்சின் எஸ்கோபியர் ஜோடியை சந்தித்தது. இதில் ராமநாதன் ஜோடி 4-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தது.
