ADDED : நவ 25, 2025 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்டு: சீனாவின் செங்டு நகரில் ஆண்களுக்கான ஆசியா-பசிபிக் 'வைல்டுகார்டு பிளே ஆப்' தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் கோப்பை வெல்லும் வீரர்கள், 2026, ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் நேரடியாக பிரதான சுற்றில் பங்கேற்கலாம்.
ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், சீனாவின் மிங்குய் ஜங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை சுமித் நாகல் 2-6 என இழந்தார். பின் சிறப்பாக செயல்பட்ட இவர், அடுத்த செட்டை 6-0 என எளிதாக வசப்படுத்தினார். தொடர்ந்து மூன்றாவது செட்டையும் 6-2 என கைப்பற்றினார்.
முடிவில் சுமித் நாகல் 2-6, 6-0, 6-2 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். இதில் மற்றொரு சீன வீரர் யுன்சாவோகேடை எதிர்கொள்கிறார்.

