கர்மான் கவுர் ஏமாற்றம் * பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்...
கர்மான் கவுர் ஏமாற்றம் * பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்...
ADDED : மே 20, 2026 11:03 PM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தகுதிச்சுற்றில் இந்தியாவின் கர்மான் கவுர் தண்டி தோல்வியடைந்தார்.
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் மே 24--ஜூன் 7ல் பாரிசில் நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. பெண்கள் ஒற்றையரில் இந்தியா சார்பில் கர்மான் கவுர் தண்டி 27, களமிறங்கினார். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 2019, 2021 (ஆஸி., ஓபன்), 2023க்குப் (யு.எஸ்., ஓபன்) பின் நான்காவது முறையாக பங்கேற்றார்.
தவிர, கடந்த 2024க்குப் (ஆஸி., ஓபன்) பின், கிராண்ட்ஸ்லாம் தொடரில் பங்கேற்கும் இந்திய வீராங்கனை ஆனார். தகுதிச்சுற்றின் முதல் போட்டியில் கர்மான் கவுர், பிரான்சின் ஹார்மோனி டானை எதிர்கொண்டார். முதல் செட்டை 1-6 என இழந்த இவர், அடுத்த செட்டையும் 0-6 என கோட்டை விட்டார். முடிவில் கர்மான் கவுர் 1-6, 0-6 என நேர் செட்டில் தோல்வியடைந்தார்.
