ADDED : டிச 27, 2025 11:18 PM

சோலாபுர்: இந்தியாவில் மகாராஷ்டிராவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, வேதா ஜோடி, இந்தியாவின் ஜீல் தேசாய், ரஷ்யாவின் நெபிலி ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை அன்கிதா ஜோடி 4-6 என இழந்தது. இரண்டாவது செட்டில் போராடிய அன்கிதா ஜோடி 7-5 என வசப்படுத்தியது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'சூப்பர் டை பிரேக்கரில்' அன்கிதா ஜோடி 10-6 என வென்றது. முடிவில் அன்கிதா ஜோடி, 4-6, 7-5, 10-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.
பைனலில் வைதேகி
ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, 6-4, 4-6, 4-6 என ஜப்பானின் ஒஜெகியிடம் தோல்வியடைந்தார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் வைதேகி, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் சக வீராங்கனை வேதாவை சாய்த்தார். இன்று நடக்கும் பைனலில் வைதேகி, ஒஜெகி மோதுகின்றனர்.

