/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
டென்னிஸ்: அரையிறுதியில் ராஷ்மிகா
/
டென்னிஸ்: அரையிறுதியில் ராஷ்மிகா
ADDED : டிச 26, 2025 11:03 PM

சோலாபுர்: இந்தியாவில் மகாராஷ்டிராவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, மாயா ரேவதி மோதினர். முதல் செட்டை ராஷ்மிகா 6-2 என வென்றார். அடுத்த செட்டை மாயா 7-5 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
மூன்றாவது, கடைசி செட்டை ராஷ்மிகா 6-1 என வசப்படுத்தினார். முடிவில் ராஷ்மிகா 6-2, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் வைதேகி, பிரான்சின் எப்ரிமோவாவை எதிர்கொண்டார். இதில் வைதேகி 4-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.
பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, வேதா ஜோடி, இந்தியாவின் ராஷ்மிகா, வைதேகி ஜோடியை சந்தித்தது. இதில் அன்கிதா ஜோடி 2-6, 7-6, 10-3 என்ற கணக்கில் வென்று, பைனலுக்குள் நுழைந்தது. இதில் இந்தியாவின் ஜீல் தேசாய், ரஷ்யாவின் நெபிலி ஜோடியை இன்று சந்திக்கிறது.

