/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
தக்சினேஸ்வருக்கு சிறப்பு அனுமதி
/
தக்சினேஸ்வருக்கு சிறப்பு அனுமதி
ADDED : டிச 25, 2025 10:57 PM

பெங்களூரு: பெங்களூரு, கிருஷ்ணா மைதானத்தில் ஏ.டி.பி., 'பெங்களூரு ஓபன்' சர்வதேச டென்னிஸ் தொடர் 2026, ஜன. 5-11ல் நடக்க உள்ளது. தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 2 கோடி. இந்தியாவின் முன்னணி வீரர்கள் சுமித் நாகல், ஆர்யன் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தின் தக்சினேஸ்வருக்கு இதில் பங்கேற்க சிறப்பு அனுமதி ('வைல்டு கார்டு') வழங்கப்பட்டுள்ளது. 2025 ம் ஆண்டு இறுதியில் வெளியான ஒற்றையர் தரவரிசையில் 519வது இடத்திலுள்ள இவர், சமீபத்திய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
6 அடி, 5 இன்ச் உயரம் கொண்ட தக்சினேஸ்வர், 2025, டேவிஸ் கோப்பை போட்டியில் தரவரிசையில் முன்னணியில் உள்ள சுவிட்சர்லாந்தின் ஜெரோம் கிம்மை வென்றார். இது இந்திய அணியின் (3-1) வெற்றிக்கு கைகொடுத்தது. சமீபத்திய உலக டென்னிஸ் லீக் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

