ADDED : அக் 25, 2025 11:05 PM

சென்னை: சென்னை ஓபன் 'டபிள்யு.டி.ஏ., 250' டென்னிஸ் தொடர் மூன்று ஆண்டுக்குப் பின் மீண்டும் சென்னையில் நாளை துவங்குகிறது. இந்தியா சார்பில் 16 வயது மாயா ரேவதி, சஹாஜா, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா என மூவருக்கு சிறப்பு அனுமதி ('வைல்டு கார்டு') வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் டாட்ஜனா மரியா, நடப்பு சாம்பியன், செக் குடியரசின் 20 வயது லிண்டா புருக்விர்ட்டோவா, போலந்தின் மாக்டா லினெட்டே, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற குரோஷியாவின் டோன்னா வெகிச் பங்கேற்கின்றனர்.
இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நேற்று துவங்கின. இந்தியாவின் அன்கிதா ரெய்னா, முதல் போட்டியில் ஜப்பானின் மெய் யமாகுச்சியை சந்தித்தார். இதில் ரெய்னா, 1-6, 3-6 என நேர் செட்டில் தோல்வியடைந்தார். இந்தியாவின் தியா, 0-6, 1-6 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் அரினா ரோடியனோவாவிடம் வீழ்ந்தார். இந்தியாவின் ரியா பாட்யா, 0-6, 2-6 என ஜெர்மனியின் வெர்னரிடம் தோல்வியடைந்தார்.
நெதர்லாந்தின் ஹர்டோனா, இந்தோனேஷியாவின் நுகுருஹோ, தகுதிச்சுற்றில் முதல் போட்டியில் வெற்றி பெற்றனர்.

