தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/டென்னிஸ்: ராஷ்மிகா வெற்றி

டென்னிஸ்: ராஷ்மிகா வெற்றி

டென்னிஸ்: ராஷ்மிகா வெற்றி


ADDED : அக் 08, 2024 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 11:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: இந்தியாவின் மைசூருவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-1' வீராங்கனை, இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, சக வீராங்கனை சோகா பாட்டீலை சந்தித்தார். ஒரு மணி நேரம், 18 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், ராஷ்மிகா 7-5, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹுமைரா, 7-5, 6-4 என சக வீராங்கனை அமோதினியை வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஆகான்ஷா, சோகா ஜோடி, இந்தியாவின் மற்றொரு ஆர்ஜான், காஷ்வி ஜோடியை சந்தித்தது. இதில் ஆகான்ஷா, சோகா ஜோடி 6-0, 6-1 என வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us