ADDED : செப் 25, 2024 10:36 PM

நந்தபுரி: சாலஞ்சர் டென்னிஸ் காலிறுதிக்கு ராமநாதன் ஜோடி முன்னேறியது.
தாய்லாந்தில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ஜப்பானின் மட்சுய் ஜோடி, ஜப்பானின் நோகுச்சி, உசிடா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை ராமநாதன் ஜோடி 7-5 என கைப்பற்றியது.
இழுபறியாக இருந்த இரண்டாவது செட்டை, இந்த ஜோடி 5-7 என கோட்டை விட்டது. வெற்றியாளரை நிர்ணயிக்க நடந்த சூப்பர் டை பிரேக்கரில் ராமநாதன் ஜோடி 10-7 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 55 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ராமநாதன் ஜோடி 7-5, 5-7, 10-7 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் காடே, ரித்விக் ஜோடி, 6-0, 6-2 என தாய்லாந்தின் சாய்யாரின், நோய்கார் ஜோடியை வென்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.