ADDED : செப் 26, 2024 10:49 PM

நந்தபுரி: சாலஞ்சர் டென்னிஸ் அரையிறுதிக்கு ராமநாதன் ஜோடி முன்னேறியது.
தாய்லாந்தில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ஜப்பானின் மட்சுய் ஜோடி, ஸ்பெயினின் கனாஸ், அர்ஜென்டினாவின் மார்கோ ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை ராமநாதன் ஜோடி 6-3 என கைப்பற்றியது.
தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஜொலித்த இந்த ஜோடி 6-4 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 4 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ராமநாதன் ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அர்ஜுன் காடே, ரித்விக் ஜோடி, 7-6, 7-6 என கடும் போராட்டத்துக்குப் பின் கனடாவின் தியாலோ, ஜப்பானின் செய்டா ஜோடியை சாய்த்தது. அரையிறுதியில் ராமநாதன்-மட்சுய் ஜோடி, அர்ஜுன் காடே-ரித்விக் ஜோடியை சந்திக்க உள்ளது.

