ADDED : அக் 31, 2024 07:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சியோல்: சாலஞ்சர் டென்னிஸ் அரையிறுதிக்கு இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி ஜோடி முன்னேறியது.
தென் கொரியாவின் சியோலில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி ஜோடி, தென் கொரியாவின் ஜியோங், பார்க் யு ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை இந்திய ஜோடி 6-3 என கைப்பற்றியது.
தொடர்ந்து இரண்டாவது செட்டையும் இந்திய ஜோடி 6-1 என வென்றது. முடிவில் இந்திய ஜோடி 6-3, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர், கலியாண்டா பூனாச்சா ஜோடி, 1-6, 3-6 என்ற நேர் செட்டில் பிரிட்டனின் பாரிஸ், தென் கொரியாவின் நம் ஜி ஜோடியிடம் தோல்வியடைந்தது.