ADDED : பிப் 19, 2025 11:10 PM

புனே: சாலஞ்சர் கோப்பை டென்னிசின் காலிறுதிக்கு இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சாகித் மைனேனி ஜோடி முன்னேறியது.
மகாராஷ்டிராவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சாகித் மைனேனி ஜோடி, பிரிட்டனின் ஹாரிஸ், ஜெர்மனியில் கீர்ட்ஸ் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 6-0 என எளிதாக வசப்படுத்தியது. தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-4 என கைப்பற்றியது. 53 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில், இந்திய ஜோடி 6-0-, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின்கலியாண்டா பூனாச்சா, ஜிம்பாப்வேயில் ஜான் லாக் ஜோடி, 6-4, 7-6 என்ற நேர் செட்டில் கனடாவின் ஸ்டீவன்சன், அலெக்சிஸ் ஜோடியை வென்று காலிறுதிக்குள் நுழைந்தது.

